இடுகைகள்

பிறந்து சிறந்த மொழியல்ல, சிறந்தே பிறந்த மொழி

வாரணமாயிரம்

பெரியாழ்வார் திருமகளாரான ஆண்டாள் இவ்வுலகத்தில் திருவாடிப்பூரத்தில் அவதரித்து , உலகு உய்ய அருளிச் செய்த திவ்யப் பிரபந்தங்கள் இர ண்டு . ஒன்று , திருப்பாவை ; இன்னொன்று நாச்சியார் திருமொழி . நான் ஸ்ரீமந் நாராயணன் என்னை மணம் புரியத் தீர்மானித்துவிட்டான் . என்னைப் பெண் கேட்டு வரும் சம்பிரதாயமாக ஆயிரம் யானைகள் சூழ வீதியில் வலம் வருகிறான் . அவனை வரவேற்கும் வகையில் நகரெங்கும் கட்டப்பட்ட தோரணங்கள் , மக்கள் தம் கரங்களில் வைத்திருக்கும் பூர்ண கும்பங்கள் மற்றும் பல மங்கள அலங்காரங்கள் எல்லாவற்றையும் நான் என் கனவில் கண்டேனடி , என் தோழி ! நான் மறுநாள் அவனுக்கும் எனக்கும் திருமணம் என்று முகூர்த்தம் நிச்சயித்தான் கண்ணன் . கமுகு பாளையால் வேயப்பட்டிருந்த பந்தலின் கீழ் அந்த மாதவன் , கோவிந்தன் ஒரு காளை போல வீற்றிருந்து இவ்வாறு அறிவிப்பதை நான் கனவில் கண்டேனடி என் தோழி ! நான் இந்திரன் மற்றும் தேவர்கள் எல்லோரும் இந்தத் திருமணத்தை இனிதாக நிறைவேற்றிட இப்பூவுலகிற்கு இறங்கி வந்தார்கள் . என்னை அவர்கள் கண்ணனுக்கு தார