சிற்றிலக்கியம்

சிற்றிலக்கியம்
குறைந்த எண்ணிக்கை உடைய பாடல்களைக் கொண்டு படைங்கப்பெறும் இலக்கிய வகையே சிற்றிலக்கியம் என்பார் தா. ஈசுவரப்பிள்ளை. அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றுள் ஒன்றோ பலவோ குறைந்து வரின் அவை சிற்றிலக்கியம் எனவும் வழங்கப்பெறும்.
வடமொழியில் பிரபந்தம் என்றழைக்கப்பெறுவதை நாம் சிற்றிலக்கியமாகக் கொள்கிறோம். பிரபந்தம் என்ற சொல் கட்டுதல் என்ற பொருளைத் தரும்.
சிற்றிலக்கிய காலம்
தொல்காப்பியத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து பதினெட்டாம் நூற்றாண்டில் கனிந்தது என்பார் முனைவர் ந.வீ.ஜெயராமன். தொல்காப்பியத்தில் பிள்ளைத் தமிழ், தூது, உலா, ஆற்றுப்படை ஆகியவற்றைக் குறித்த கருத்துகள் சுட்டப்பட்டுள்ளன. இவை பிற்காலத்தில் தனித்த சிற்றிலக்கிய வகையாக வளர வித்தாக அமைந்துள்ளன.
பத்துப்பாட்டில் ஐந்து நூல்கள் ஆற்றுப்படை நூல்களாக அமைகின்றன. அக்காலத்திலேயே ஆற்றுப்படை ஒரு துறையாக வளர்ந்துள்ளது. நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் தழைத்தோங்கின. எனவே அக்காலத்தை சிற்றிலக்கிய காலம் என்றே அழைப்பர்.
அமைப்பு
சிற்றிலக்கியங்கள் அளவில் சிறியதாக அமையும். பல துறை சார்ந்த பெரிய நூல் போல் அமையாமல் ஒரு சில துறைகளைப் பற்றிய ஆழமான பார்வை உடையனவாக அவை அமைகின்றன. காப்பியங்களைப் போல உலகப் பார்வை இல்லாமல் வட்டாரச் சார்புடையனவாகத் திகழ்கின்றன.  
சிற்றிலக்கிய வகை
பாட்டியல் நூல்களின்படி 96 பிரபந்தங்களின் பட்டியலைப் பார்த்தால் அதில் காப்பியம், புராணம், சிறு நூல்கள் என அனைத்தும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.  இதுகாறும் கிடைக்கப் பெற்றவற்றுள் முந்நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகை தமிழில் இருந்தாலும் அவற்றுள் தலையாயவையாக இருப்பன பதினான்கு வகைகளாகும். அவை யாவன.
1.   ஆற்றுப்படை ஆற்றுப்படுத்துதல் என்பது வழிப்படுத்துதல் என்று பொருள்.  வறுமை தீர விழைவோரிடம் வறுமை தீரப்பெற்றோர் தமது வறுமையைப் போக்க வள்ளல்களிடம் சென்று பொருள் பெறுவது அக்கால வழக்கம். அவ்வாறு பரிசு பெற்றுச் செல்லும் புலவர் இன்னொருவரை வழிப்படுத்துத்ம முறையில் அமையும் இலக்கியமே ஆற்றுப்படை இலக்கியமாகும். சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் ஐந்து நூல்களான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியன இவ்வகை இலக்கியத்தைச் சார்ந்தவை.
2.   அந்தாதி ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி ஆகியவற்றில் ஒன்று அடுத்த செய்யுளின் முதலில் அமைவது அந்தாதி எனப்படும். காரைக்கால் அம்மையார் இயற்றிய அற்புதத் திருவந்தாதி என்ற நூலே அந்தாதி வடிவில் கிடைத்த முதல் தனி நூலாகும்.
3.   மாலை ஒரு பொருள் குறித்து பல செய்யுள்களைப் பல பாவகைகள் கொண்டு இயற்றப்படுவது மாலை எனப்படும். 96 வகை சிற்றிலக்கியங்களுள் 28 வகை மாலைகள் காணப்படுகின்றன.
4.   பதிகம் ஒருவகைப் பாவினால் பத்துப் பாடல்களைப் பாடுவது பதிகம் எனப்படும். இறுதியில் பதினோராம் பாடல் பாடியோர் பெயரையும் பத்துப் பாடல்களைப் படிப்பதன் பயனையும் கூறுவதாக அமையும. ஒரு பா ஒருபஃது, இருபா இருபஃது ஆகியன இவ்வகையில் அமைந்ததாகும். காரைக்காலம்மையார் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் காலத்தால் முந்திய பதிகங்களாகும்-
5.   கோவை
6.   உலா
7.   பரணி
8.   கலம்பகம்
9.   பிள்ளைத் தமிழ்
10. தூது
11. சதகம்
12. மடல்
13. பள்ளு
14. குறவஞ்சி

கருத்துகள்