கலித்தொகை

கலித்தொகை
1
பாடியவர; : பெருங்கடுங்கோ
திணை : பாலை
துறை : தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து ‘நீர; செல்லும் கடுஞ்சுரத்துத் துன்பத்திற்குத் துணையாக, எம்மையும் உடன் கொண்டு சென்மின்’ எனத் தலைவி கூறியது.
துறை விளக்கம் :
தலைவன் தன்னைப் பொருள் ஈட்டுதற் காரணமாகப் பிரியப் போகின்றான் என்பதை அறிகின்றாள் தலைவி. அவன் பிரிவை ஆற்ற இயலாதவளாய் தலைவனிடம் ‘நீ செல்லும் வழி பாலை நிலமாக இருந்தாலும் அதைக் கடப்பதற்குண்டாகும் துன்பத்திற்குத் துணையாக என்னையும் உன்னுடன் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்’ என வற்புறுத்துகின்றாள்.
பாடல் விளக்கம் :
மழை இல்லாமல் வறண்டு போன அப்பாலை நிலத்தில் காட்டுப் பசுக்கள் (கற்றாழைகள் சேர்த்த ஒருவகை புல்லான) மரலை உணவாக உட்கொள்ளுகின்றன. அக்கொடிய காட்டில் பயணம் செய்வோர் மீது குற்றம் செய்யும் மறவர்கள் அம்புகளைச் செலுத்துவர். அதனால் உடல் சுருங்கி> குருதி வடிந்து> நா வறட்சி அடைந்து தவிக்கும்போது தண்ணீர் கூட கிடைக்காது. வலியால் துடித்தழும் அவருடைய கண்ணீரே அவருடைய தாகத்தைத் தீர்க்கும். அப்படிப்பட்ட கொடுமையான காடு அது என்று கூறி> vன்னை உம்முடன் அழைத்துச் செல்ல மறுப்பு கூறுவது உன் இயல்பிற்கு ஏற்றதல்ல.  உன்னைப் பிரிந்தால் நான் உயிர் வாழாது இறந்து படுவேன் என்பதை நன்றாக அறிந்தவன் நீ. எனவே உன்னை விட்டு பிரிந்து எய்தும் ,த்துன்பத்திற்குரிய காட்டிற்கு உன்னுடன் நானும் துணையாக வருவதே எனக்கு இன்பம் என்று தலைவி தன்னைப் பிரியக் கருதிய தலைவனுக்குக் கூறினாள்.

2
பாடியவர; : கபிலர்;
திணை :குறிஞ்சி
துறை : நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும் புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை, தன்னை அவள் மறையாமை காரணமாக மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர;பொருள் நாட்டத்தான் தலைமகட்குத்தோழி கூறியது.
துறை விளக்கம்:
இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவியிடம் நிகழும் செயல் மாறுபாடுகளை,
1.    நாற்றம்
2.    தோற்றம்
3.    ஒழுக்கம்
4.    உண்டி
5.    செய்வினை மறைப்பு
6.    செலவு
7.    பயில்வு
8.    முதலான
ஏழின் மூலமாகத் தோழி அறிகின்றாள். தலைவி தன்னுள் நிகழ்ந்;த மாற்றத்தை மறைக்கின்றாள் என்பதை உணர்ந்த தோழி அவள் உள்ளத்தை ஆராயும் பொருட்டு பொய்யாக ஒரு நாடகம் ஆடி அவள் உள்ளத்தை வெளிப்படுத்த முயல்கின்றாள்.
பாடல் விளக்கம் :
·    குளத்தில் உள்ள நீலமலர் போன்ற கண்களை உடையவளே> நான் கூறுவதை எண்ணிப் பார்ப்பாயாக.
·    ஒப்பில்லாத ஒருவன் வலிமை பெற்ற யானை முதலிய விலங்குகளின் அடியைத் தேடுபவன் போல அழகான மாலையை அணந்திருந்தான். கையில் வில் பிடித்திருந்தான். அவன் என்னைக் கண்டான். நான் அவனைக் கண்டேன்.
·    எங்கள் உள்ளத்தில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் அதை அறிந்திருந்தும் வார்த்தைகளால் அதை வெளிப்படுத்தாது பல நாட்கள் கண்களால் மட்டுமே கண்டு சென்றான். அவன் செயலைக் கண்டு அவனிடத்து உறவில்லாத நானும் அவ நினைவால் தூக்கம் இல்லாமல் வருத்தத்தில் ஆழ்ந்து போனேன்.
சில நேரம் நேரில் சென்று அவனையே கேட்கலாம் என்றால் பெண்மைக்கு அது முறையாகாது என்று என் புத்தி கூறியது.
·    ஆனால்> இப்படியே அவன் நினைவை மட்டுமே சுமந்து செல்வேனாயின் வருத்தத்தால் ஒரு நாள் இறந்துவிடுவேன் என்று எண்ணினேன்.
·    அதனால் என் வருத்த மிகுதியால் என் தோள்கள் மெலிந்தது. எனவே நான் துணிந்து ஒரு நாணமில்லாத செயலைச் செய்தேன்.
·    மணங்கமழும் நெற்றியுடையவளே> தினைப்புனம் காவல் காக்கும் இடத்திற்கு அருகில் ஓர் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு ஆடாமல் நின்றேன். ஒருநாள் அவன் வந்தான். அவனிடம் ‘ஐயா சிறிது என்னை ஊஞ்சலாட்டி விடுக’ என்றேன். அவனும் ‘பெண்ணே நீ கூறியது நன்று’ என்று கூறி ஊஞ்சலாட்டினான்.
·    நான் பொய்யாக என் கை நெகிழ்வது போலக் காட்டி அவன் மீது விழுந்தேன். அவனும் அதனை உண்மை என்றே நினைத்துக் கொண்டு விரைந்து என்னை எடுத்து அணைத்துக் கொண்டான். உண்மை அறியாதவள் போல் அவன் மார்பில் மேலேயே வீழ்ந்து கிடந்தேன். திடீரென்று உண்மை உணர்ந்தவள்போல் அவன் மார்பின் மீது விழுந்து கிடக்கிறோமே என்று எழுந்தேன். அவனும் விரைவாக ‘அழகிய கூந்தலை உடையவளே செல்க’ என்று கூறி என்னிடம் அன்பு ொண்டவனாய் காணப்பட்டான்
என்றாள்
 உரைவிளக்கம் :
உலகியலில் ஆண்மையால் பெண்மையும் nபண்மையால் ஆண்மையும் சிறந்து நிற்கிறது. தலைவனும் தலைவியும் விதி வசத்தால் ஒருவரை ஒருவர் எதிர்ப்படும்போது வீரம் நிமிர்ந்து நிற்கிறது. நாணம் தலை கவிழ்கிறது. காதலால் வீரம் விளைகிறது. வீரத்தால் காதல் தோன்றுகிறது. இது உலக இயல்பு.

3
பாடியவர; : கபிலர;
திணை :குறிஞ்சி
துறை: புகாஅக்காலைப் புக்கு எதிர;ப்பட்டுழி பகாவிருந்தின் கண் தலைவி தோழிக்குக் கூறியது.
துறை விளக்கம் :
தலைவன் தான் புகுவதற்குத் தகுதி இல்லாத மதிய நேரத்தில் தலைவியின் வீட்டிற்குச் சென்று தலைவியைச் சந்திக்கின்றான். விலக்கப்பட முடியாத விருந்தினனாக அவனை ஏற்கும் போது தலைவிக்கு அவனோடு கூற்று நிகழ்கின்றது. அத்தகையதொரு நிகழ்ச்சியைத் தலைவி தோழிக்குக் கூறினாள்.
பாடல் விளக்கம் :
1.    ஒளி பொருந்திய வளையலை அணிந்தவளே> நான் கூறுவதைக் கேள். சிறுவயதில் தெருவில் நாம் மணல் வீடு கட்டி உணவு சமைத்து விளையாடும்போது அம்மணல் வீட்டை காலால் சிதைத்தும் நம் கூந்தலில் சூட்டிய மாலையை அறுத்தும்> நாம் விளையாடும் பந்தைப் பறித்துக் கொண்டு ஓடியும் நாம் கலங்குமாறு செயல்களைச் செய்தவன் இன்று காளையாக வளர்ந்து விட்டாள்.
2.    ஒருநாள் அன்னையும் நானும் வீட்டில் இருந்தோம். அப்பொழுது இல்லத்தில் இருப்பவரே> தாகமாய் இருக்கிறேன் குடிக்க நீர் வேண்டும் என்று சொல்லி வந்தான். அன்னையும் பொன்னால் செய்த கலத்தில் கொண்டு போய் கொடு என்று கூற> நானும் நம்மிடம் விளையாடியவன் இவன் என்பதை அறியாது சென்றேன்.
3.    நீர் கொடுக்கச் செல்லும்போது அவன் என்னுடைய வளையணிந்த முன்கையைப் பிடித்து நலிவித்தான். நான் பயந்து போய் ‘அன்னையே இவன் செய்த ஒரு செயலை பாருங்கள்’ எனக் கூச்சலிட்டேன். தாயும் அலறித் துடித்து வந்தாள்.
4.    ஆனால் அவள் செய்த காரியத்தை மறைத்து அன்னையிடம் ‘நீர் அருந்துகையில் விக்கினான்’ என்று பொய் கூறினேன். தாயும் அவன் முதுகைப் பலமுறை நீவித் தடவினாள். அப்பொழுது என் தாய் பார்க்காதவாறு என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி மனமகிழ்ச்சி தரும்படி புன்னகைத்தான் என்று கூறினாள்.

கருத்துகள்