அகநானூறு


அகநானூறு
1
பாடியவர; : கயமனார;
திணை : பாலை
துறை : மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப்பின் சென்று நவ்விப் பிணாக்கண்டு கூறியது
துறை விளக்கம்:
தலைவி தலைவனுடன் உடன்போக்குச் சென்று விட்டாள். அதனை அறிந்த செவிலித்தாய் அவளைத் தேடி பாலை வழியே பின் தொடர;ந்து சென்றாள். இடைச்சுரத்தில் பெண்மான் ஒன்றைக் கண்ட செவிலி அதனிடம் தன் ஆற்றாமையைப் புலப்படுத்திக் கூறுகின்றாள்;.
கூற்று   : செவிலித்தாய்                            
பாடல் விளக்கம்:
·         இனிய குரல் கொண்ட ஆண்மான் இனத்தைச் சேர்ந்த இளைய மானே>
·         என் மகளை நோக்கி நான்> ‘அழகிய இளைய மகளே உனக்குப் பெண்மை மலர்ந்துவிட்டது. உன் பற்கள் ஒளி பொருந்தியதாகக் காணப்படுகின்றன. கூந்தலும் நன்கு வளர்ந்துவிட்டது. குspர்ந்த தழையாடையை நீ உடுத்த தொடங்கிவிட்டாa;. ஆகவே சுழன்று திரியும் உன் தோழிகளுடன் எங்கேயும் செல்லாதே! இந்த ஊரில் தாக்கி வருத்தும் தெய்வங்கள் பல உள்ளன. அதனால் நீ இனி காவல் இன்றி தனியே செல்லல் ஆகாது. நம் வீட்டின் வாயிலிடத்தும்கூட செல்லாது இருப்பாயாக. இனி நீ பேதைப் பருவத்திலிருநது பெதும்பைப் பருவத்தினளாகிவிட்டாய். எனவே என் வார்த்தையை மீறி புறம் செல்லாதே’ என கடிந்து கூறினேன். 
·         பொன்னாற் செய்த புலிப்பாலோடு கோத்த மணித்தாலியை அணிந்தவளும் தழையாடையால் தன் உடலை மறைத்துக் கொள்ளும் இயல்புடையவளும் பலாக் கொட்டைகள் எவ்விடத்தும் இiuந்து கிடக்கும் மலையாட்கள் அமைந்துள்ள குடியை உடையவருமாகிய கானவன் மகளாகிய என் மகள் நான் கடிந்து கூறியவற்றைக் கேட்டாள்.
     
·         வலையைத் தொலைவில் கண்ட ஒரு பெண்மான் அதனுள் அகப்பட விரும்பாது விரைந்து தப்பித்து ஓடுமாறுபோல என் இற்செறிப்புக்கு உட்பட விரும்பாத என் மகள் வீட்டைத் துறந்து தலைவனோடு இச்சுரத்தே இவ்வழியின் கண் சென்றுவிட்டாள். வழியில் செல்வோரை அலறும்படி தாக்கி அவர் கைப்பொருளை அபகரித்துக் கொள்ளும் ஆறலைக் கற்வர்கள் தொழுவங்களில் இருந்து பசுக்களைக் கவர்ந்து செல்ல அவற்றை மீட்க விரையும் பசுக்களின் உரிமையாளர்கள் ஆரவாரத்துடன் அவர் பின்னே தொடரந்து ஓடி ஓடிச் சொல்வது போல நானும் என் மகளை உடன்போக்கினின்றும் மீட்டுக் கொண்டு போகக் கருதி உள்ளத்தில் ஆரவாரம் கொண்டு அவளைப் பின்தொடர்ந்து ஓடி ஓடி வந்தேன். ஆயினும் அவள் உருவத்ததைக் காணப் பெற்றிலேன். ஆகவே நான் கூறுவதைக் கேட்டு அவர்கள் செல்லும் வழியை எனக்குக் கூறுவாயாக எனக் கேட்கின்றாள்.

2
பாடியவர் : பரணர்
திணை : குறிஞ்சி      
துறை :
·         தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவானாய்த் தலைமகள் சொன்னது
·         தலைவன் சிறைப்புறத்தானாக அவன் செவியுறுமாறு தோழ தலைவிக்குக் கூறியதும் ஆம்
துறை விளக்கம் :

     தாய் உறங்காமை, நாய் உறங்காமை, ஊர; உறங்காமை, காவலர; கருகிக வருதல், நிலவு வெளிப்டுதல், ஆந்தை குழறுதல், கோழி குரல் காட்டல் போன்றவற்றால் தலைவன் குறியிடத்துத் தலைவி வராதபோது மீண்டும் தலைவன் சிறப்புறத்தானாகத் தலைவி அவன் கேட்குமாறு தான் அடைந்த துன்பங்களைத் தோழிக்குச் சொல்லியது.
கூற்று : தலைவி, தோழி
பாடல் விளக்கம் :
1.   தோழி, மதுவுண்டு களித்தாடும் மக்களைக் கொண்ட ஊர் நமது ஊர். ஆதலால் விழாக்கள் நடைபெறவில்லை என்றாலும் மக்கள்  உறக்கம் கொள்ளாது மதுவுண்டு களித்தாடுவர்.

2.   ஒரு வேளை ஊரில் உள்ள வளம் மிக்க கடைத்தெருக்களும் பிற தெருக்களும் ஒரு சேர உறங்கி ஒலி அடங்கினாலும் உரத்த குரலில் கொடிய சொற்களைப் பேசும் ம் அன்னை உறங்க மாட்டாள்.
3.   நம்மைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் அன்னை உறங்கினாலும் உறங்காத கண்களைக் கொண்ட ஊர்க்காவலர் ஊரைச் சுற்றி வருவர்.
4.   ஒளி பொருந்திய காவலையுடைய அக்காவலர் உறங்கினாலும் கூர்மையானப் பற்களைக் கொண்ட நாய் குரைக்கும்.
5.   நாய் குரைக்காது உறங்கினாலும் வானத்தில் நிலவு தோன்றி எங்கும் ஒளி செய்யும்.
6.   திங்களும் மேற்கு மலையை அடைந்து மறைந்துபோய் இருள் தங்கினாலும் எலியை இரையாகக் கொள்ளும் ஆந்தைகள் பேய் திரியும் நள்ளிரவில் குழறத் தொடங்கும்.
7.   அவ் ஆந்தைகள் குழறாது உறங்கினாலும் வீட்டில் வாழும் கோழி> சேவல் தம் குரலை எழுப்பிக் கூவுதல் செய்யும்.
8.   ஒருநாள் இவை எல்லாம் உறங்கினாலும் என் உள்ளத்தோடு பிணைந்திருக்கின்ற நெஞ்சை உடைய எம் தலைவன் என்னைக் காண வருவதில்லை.
9.   அதனால் நாம் மேற்கொள்ளும் இந்தக் களவொழுக்கம் தித்தன் என்பவனது காவல் சூழ்ந்த பாறைகள் நிறைந்த காடு போன்ற பல்வேறு இடையூறுகளைக்கொண்டது என்று கூறி வருந்துகின்றாள். (தித்தன் என்பவன் உறையூரை ஆட்சி செய்த சோழன். சினம் மிக்க பேராற்றல் உடையவன். பாணரை வறியரைப் பாதுகாக்கும் வள்ளல் தன்மை கொண்டவன்)

3
பாடியவர் : பெருங்கடுங்கோ
திணை : பாலை
துறை :தலைமகன் பிரிவின்கண் வேறபட்ட தலைமகள் சொல்லியது
துறை விளக்கம் :
பொருளீட்டல் வேண்டி தலைவன் தலைவியைப் பிரிந்தான். அப்பிரிவினை ஆற்றாது உடல் வேறுபட்ட தலைவியைத் தோழி தெளிவுறுத்த, அப்போது தோழியை நோக்கித் தலைவி கூறியது.
கூற்று : தலைவி
பாடல் விளக்கம்:
   அழகிய அணிகலன்களை அணிந்த தோழியே! எக்காலத்தும் பாவ நெறியில் செல்லாத வாழ்க்கையும் பிறர் வீட்டு வாயிலின் சென்று நின்று இரவாது இருக்கும் பண்பும்> பொருளால் கிடைக்கப்பெறும் என்று நம் தலைவர் பொருளீட்டுவதற்காக நம்மைப் பிரிந்து சென்றுவிட்டார்.
·         கோவலu; தாம் தோண்டிய கிணற்றில் இருந்து இறைத்த நீரைப் பசுக்கள் உண்ணும் பொருட்டு சீழ்க்கை ஒலி எழுப்புவர். அவர்கள் இறைத்த நீர் ஒழுகிச் சென்று சிறுகுழியில் நிரம்பியது. கதிரவன் காய்ந்தமையால் அந்நீரும் வற்றி குழியும் காய்ந்தது. இதனால் பசுக்கள் நீருண்ண முடியாமல் தவித்தன.
·         நீருண்ண வந்த யானை நீர் இல்லாமல் சிறிய ஈரத்துடன் காணப்பட்ட குழியைக் கண்டு வருத்தமுற்றுj; தன் நீர் வேட்டையைத் தணித்து கொள்ள வேறு இடம் காணப் பெறாது அக்குழியினை மிதித்துச் சென்றது.
·       

கருத்துகள்