குறுந்தொகை

குறுந்தொகை
1
பாடியவர் : ஆலங்குடி வங்கனார்
திணை: மருதம்
துறை : கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
துறை விளக்கம் :
தலைவி தன்னைப் பழித்துக் கூறினாள் என்பதை அறிந்த காதற்பரத்தை, தலைவன் தன்னுடைய மனைவிக்கு அஞ்சி நடப்பதாக அவள் சுற்றத்தார; கேட்குமாறு கூறினாள்.
பாடல் விளக்கம் :
வயல் அருகில் உள்ள மாமரம் தன்னை வைத்துப் போற்றுவார்க்குப் பயன்படாமல் ஒரு முயற்சியும் செய்யாமல் வயலில் திரியும் வாளைமீன்கள் கவ்வி உண்பதற்குப் பயன்படுவதாயிற்று. அப்படிப்பட்ட மருத நிலத்திற்கு உரிய தலைவன் என்னை வயப்படுத்துவதற்காக பெருமொழிகளைக் கூறிச் செல்கின்றான். ஆனால், தம்முடைய வீட்டில் தமக்கு முன் நிற்பவர் கைகையும் காலையும் தூக்கும்போது தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றும் பாவை போல தன் புதல்வனை ஈன்ற மனைவிக்கு அவள் விரும்பிய செயல்களைச் செய்கின்றான் என்று கூறினாள்.

2
பாடியவர் : கபிலர்
திணை : குறிஞ்சி
துறை : வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
துறை விளக்கம் :
தலைவன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலத்தை வீணே கழிக்கின்றான் என்பதை உணர;ந்த தலைவி தன் தோழிக்குச் சொல்லியது.
பாடல் விளக்கம் :
தோழி தலைவன் என்னைக் களவில் மணந்து கொண்ட போது சான்றுக்கு ஒருவரும் இலர். தலைவனாகிய கள்வன் ஒருவன் மட்டும்தான் இருந்தான். அவன் களவுக் காலத்தில் ‘உன்னைப் பிரியேன்’ என்று எனக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை மீறுவானாயின் நான் என்ன செய்வேன்? அவன் என்னை மணந்தபோது ஓடுகின்ற நீரில் செல்லும் ஆரல் மீனின் வருகையை உண்பதற்காக எதிர்ப்பார்த்து காத்திருந்த நாரை இருந்தது. ஆனால் அது தன் உணவை நோக்கிலே  இருந்ததால் அவன் செய்த சூளுரையைக் கேட்டிராது. நான் என் செய்வேன் எனத் தலைவி ஏங்கினாள்.

3
பாடியவர் : அள்ளுர் நன்முல்லையார்
திணை: குறிஞ்சி
துறை : பின்னின்றான் கூறியது
துறை விளக்கம் :
தோழியை இரந்து பின் நின்ற தலைவன் தலைவியை மணந்து கொள்ள மடலேறுதலே தனக்கு உற்ற வழி என தோழியிடம் கூறினான்.
பாடல் விளக்கம் :
·    காலைப் பொழுது, பகற்பொழுது, மாலைப்பொழுது, ஊரார் உறங்கும் நள்ளிரவுப் பொழுது ஒருவரும் துஞ்சாத விடியற்பொழுது என்ற இவ்வைந்து பொழுதுகளில் இயல்புகளை ஆராய்ந்து நோக்கினால் காமம் என்பது பெhய் என்றே தோன்றுகின்றது.
·    நான் என் தலைவியுடன் சேர்வதற்குப் பொழுதும் இடமும் பெரிய தடையாக இருக்கின்றன. அவளை அடைய நான் மடலூர்ந்து சென்று என் குறையைப் பலரும் அறிய எடுத்துக் கூறினால் அது அவளுக்குப் பழியை உண்டாக்கும்.
·    ஆனால் அங்ஙனம் மடலூராமல் என் மனக்குறையை வெளிப்படுத்தாமல் உயிர்வாழ்வது எனக்குப் பழியை உண்டாக்கும் எனத் தலைவன் கலங்கி நிற்கின்றான். (துணையைப் பிரிந்தவர்க்கு மாலை மட்டுமே செயலறவினைத் தொற்றுவிக்கும். ஆனால் எல்லாப் பொழுதுகளுமே தலைவியைக் கூடாத தலைவனுக்குச் செயலறவினைத் தோற்றுவித்தன.)

கருத்துகள்