புறநானூறு



புறநானூறு
1
பாடியவர் : ஔவையார்                      பாடப்பட்டோர் :அதியமான்
திணை  : தும்பை
பகையரசனை எதிர;த்துப் போர; செய்யக் கருதித் தும்பைப் பு+வைச் சூடுதல்  தும்பைத் திணையாகும்.
துறை : தானை மறம்
இரு படைகளின் சிறப்புக் கூறி போரினை விலக்குதல் தானை மறமாகும். மள்ளரும்உளர் என்னையும் உளன் என்று படைமாட்சி கூறப்பட்டதால் இது தானைமறம் ஆனது.
பாடல் விளக்கம் :
பகை மன்னன் வினவ அதற்கு விடைகூறும் விறலி கூற்றாக ஔவையார் இப்பாடலை அமைத்துள்ளார்.
பகை மன்னன் அணியால் பொலிவு பெற்ற அழகினையும் மைதீட்டப்பட்ட கண்களையும் ஒளியுடைய நெற்றியையும் உடைய விறலியே> உன்னுடைய நாட்டில் என்னோடு போரிடுவார் உண்டோ? என வினவினான். அதற்கு விறலp அடங்காத போரினைச் செய்யும் படை வேந்தனே> நீ பேhர் செய்ய கருதினால்> அடிக்கும் கோலுக்கு அஞ்சாது சீறும் பாம்பைப் போன்ற வலிமையான வீரர்கள் என் நாட்டில் உள்ளனர். அவர்களேயன்றி> பொது இடத்தில் இழுத்துக் கட்டப்பட்டுள்ள முரசில் காற்று மோதுவதால் உண்டான ஓசையைக் கேட்ட அளவில் அது போர்ப்பறையில் ஏற்பட்ட முழக்கம் எனக் கருதி மகிழும் மன்னனாகிய அதியமானும் உள்ளான் எனக் கூறினாள்.

2
பாடியவர; : கபிலர;                              பாடப்பட்டோர; : பாரி
திணை: பாடாண் திணை
பாடப்படும் ஆண்மகனது வீரம், கொடை, புகழ் ஆகிய ஒழுகலாற்றை விவரித்துக் கூறுவது பாடாண் திணையாகும்
துறை : இயன்மொழி
வெற்றி, பண்பு நலன்களில் சிறந்து நிற்கும் மன்னரைப் புகழ்ந்து கூறவது இயன்மொழி வாழ்த்தாகும்.
திணை : நொச்சி
பகையரசனால் முற்றுகை இடப்பட்ட தனது மதிலைப் பாதுகாக்கும் பொருட்டு அம்மதிலின் உள்ளே உள்ள அரசன், வீரர; ஆகியோர; நொச்சிப் பு+வைச் சூடிப் போர; செய்வர;. அப்போர;ப் பு+வைப் பாடுவது நொச்சித் திணையாகும்.
      ஒரு வீரன் திருமணம் செய்வதற்குத் தம் மகளை வேண்ட சிறிய அரண்களில் உள்ளோர் வேண்டாம் என மறுத்துச் சொல்லுதல் மகள் மறுத்தல் எனப்படும். வேற்று நாட்டு பகை வேந்தன் தம் மகளைத் திருமணம் செய்து கொள்ள பெண் பேட்டு வர தன் மகளைத் தர மறுப்பு கூறுவது மகள் மறுத்தல் என்னும் துறையாயிற்று
பாடல் விளக்கம்:
பாரியின் பறம்பு மலையை உடைய நினைக்கும் பகை மன்னர்க்கு புலவர் அறிவுறுத்தும் தன்மையில் இப்பாடலைப் பாடியுள்ளார்.
பாரியின் பறம்பு மலை உழவரால் உழுது விளைவிக்காத விளைச்சலைப் பெற்றது. அவற்றி்ல்
1.   சிறிய இலையினை உடைய மூங்கிலின் நெல் விளையும்
2.   சுவையுடைய பலா விளையும்
3.   கொழுங்கொடியை உடைய வள்ளிக் கிழங்கு விளையும்
4.   தேன் விளையும்
அவனது மலை அகல நீள உயரத்தால் வானத்தை ஒத்திருக்கும் அம்மலையின் உள்ளே உள்ள சுனை வானத்தில் உள்ள விண்மீனை ஒத்திருக்கும். இப்படிப்பட்ட வளமுடைய பறம்பு மலையைக் கைப்பற்றலாம் என்று எண்ணிக் கொண்டு யானைப்படை> தேர்ப்படை கூட்டி வந்து உங்கள் போர் முயற்சியில் பாரியை வென்று இப்பறம்பு மலையை அடைய முடியாது. மூவேந்தர்கள் ஒன்றுகூடி சூழ்ந்து போரிட்டாலும் அவனை வெற்றி கொள்ள இயலாது. ஆனால்> கூத்தர் வேடமிட்டு விறலியர் வேடம் தாங்கி> பாரி முன் யாழ் மீட்டி ஆடிப் பாடுவீராயின்> அவன் வியந்து மலையையும் நாட்டையும் பரிசளிப்பார். பரிசிலாக அவd; நாட்டையும் மலையையும் அடையலாமே தவிர போரிட்டு அடைய முடியாது என்பது மூவேந்தர்க்கும் உணர்த்துகின்றேன்.


3
பாடியவர் : கழைதின் யானையார்                   பாடப்படடோர் : வல்வில் ஓரி
திணை : பாடாண்
பாடப்படும் ஆண்மகனது வீரம், கொடை, புகழ் ஆகிய ஒழுகலாற்றை விவரித்துக் கூறுவது பாடாண் திணையாகும்.
துறை : பரிசில் துறை
நிலத்தைக் காக்கும் காவற் தொழிலையுடைய மன்னனிடம், இரவலன் ஒருவன் தான் பெற நினைத்த பொருள் இஃதெனக் கூறியது பரிசில் துறையாகும்.
பாடல் விளக்கம்: 
1.   இதை எனக்குக் கொடுத்திடு என்று இரப்பது இழிவான செயல். அவ்வாறு கேட்டவர்க்குக் கொடுக்கமாட்டேன் எனக் கூறி மறுத்தல் அவ்விரத்தலை விட இழிவான செயல்.
2.   ஒருவன் கேட்பதற்கு முன்பாகவே அவன் குறிப்பை முகத்திலிருந்து அறிந்து கொண்டு இதனை ஏற்றுக் கொள்க என்று கூறி கொடுப்பது உயர்வான செயல். அவ்வாறு கொடுக்கும்போது இரவலர் அதனை ஏற்காது வேண்டாம் என மறுத்தல் அக்கொடைச் செயலைக் காட்டிலும் உயர்ந்தது.
3.   தெளிந்த நீர்ப்பரப்பை உடைய ஒலிக்கும் அலைகளைக் கொண்ட பெரிய கடலின் நீரைத் தாகமுற்றவர் பருகுவதில்லை. ஆடு> மாடு முதலிய விலங்குகள் நீர் பருகச் சென்று அந்நீரைக் கலக்Ftதனால் சேறு உண்டாFk;. இருப்பினும் அந்நீர் இருக்கும் பாதைத் தேடிச் செல்பவர் பலர் உண்டு. இரவலர் தாம் பரிசிலை எதிர்நோக்கி செல்லும் இடத்தில் பரிசில் மறுக்கப்பட்டாலும் பரிசில் தராதோரை அவர்கள் பழிப்பதில்லை. மாறாக தம் பழியில் எதிர்ப்பட்ட பறவைகளையும் புறப்பட்ட நேரத்தையும் பழிப்பர்.
எனவே> வானத்தில் மின்னல் முதலாகிய மழை தொகுதியையுடைய மழை போல யாவர்க்கும் எப்பொருளையும் வரையாது வழங்கும் வள்ளண்மையுடைய ஓரியே> நீ எனக்குப் பரிசில் வழங்கவில்லையாfpலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன் என்று கூறுகின்றார்.

கருத்துகள்