நற்றிணை

நற்றிணை
பாடியவர் : தெரியவில்லை
திணை: பாலை
குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பு நிலையில் இருந்து திரிந்து வருவது பாலைத் திணையாகும். இதன் உரிப்பொருள் பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
துறை:  உடன்போக்கும் தோழி கையெடுத்தது
தலைவி விரும்பியவண்ணம் அவளைத் தலைவனுடன் ஒன்று சேர;த்த பின்னர; தோழி, ‘இவளை என்றும் பேணிக் காப்பாயாக’ என அவனிடம் ஓம்படுத்திக் கூறுவது.
பாடல் விளக்கம்: 
மலர்கள் விளங்கும் பொழில் சூழ்ந்த ஊரை உடையவனே, ‘இனிய கள்ளுணவையும், நெடிய தேர்களையும் உடைய வலிமை மிக்கவர் சோழ மன்னர். இச்சோழ மன்னர் கொங்கரை அடக்கும் பொருட்டு வெண்மையான கோட்டினையுடைய யானைகளைக் கொண்ட போஒர் என்னும் ஊரின் தலைவனாகிய பழையன் என்னும் படைத்தலைவனிடம் வேற்படையைப் பெற்று வைத்திருந்தhர். அவ்வேற்படையைப் போல உன்னுடைய சொல் தப்பாது என உன்னை நம்பி நிற்கின்றாள் தலைவி. எனவே, இவளுடைய அழகிய கொங்கைகள் தளர்ந்தாலும், பால் போன்ற மேனியில் தவழ்கின்ற நெடுங்கூந்தல் நரை பெற்றாலும் இவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக’ என்று கூறினாள்.

2
பாடியவர் :போதனார்
திணை : பாலை
குறிஞ்சியும் முல்லையும் தம் இயல்பு நிலையில் இருந்து திரிந்து வருவது பாலைத் திணையாகும். இதன் உரிப்பொருள் பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
துறை : மனை மருட்சி, மகள்நிலை உரைத்தல்
மனை மருட்சி :
தலைவனுடன் உடன்போக்கு சென்ற தம் மகளின் விளையாட்டுப் பருவம் மாறாத தன்மையை எண்ணி, அவள் எப்படித் தன் தலைவனுடன் இல்லறம் ஆற்றுவாளோ என நற்றாய் வீட்டில் இருந்தபடியே உள்ளம் கலங்குவது இத்துறையாகும்.
மகள் நிலை உரைத்தல்:
தலைவி இல்லறம் ஆற்றும் தன்மையினை உவப்புடன் கண்டு வந்த செவிலித்தாய், அதனை நற்றாயிடம் வந்து பாராட்டி உரைப்பது இத்துறையாகும்.
பாடல் விளக்கம் :
மெல்லிய நரைத்த கூந்தலையுடைய செவிலியர் தேன் கலந்த நல்ல சுவையுடைய இனிய பாலுணவை பொற்கலத்தில் இட்டனர். அவ் உணவை ஒரு கையில் ஏந்திக் கொண்டு பூப் போன்ற சிறு கோலை ஓங்கி நீ உண்க என்று அடிக்க முற்படும்போது, பொற்சிலம்பு ஒலிக்குமாறு தாவியோடும் தன்மையுடையவள் தலைவி. செவிலியர் அவளைப் பின்தொடர முடியாமல் துன்பப்பட, பந்தலின் கீழ் நின்று உண்ணேன் என்று மறுக்கும் சிறிய விளையாட்டுப் பருவத்தை உடையவள்.
அப்படிப்பட்டவள், அறிவையும; ஒழுக்கத்தையும் எவ்வாறு உணர்ந்தாள். தான் மணந்து கொண்ட தலைவன் வறுமையுள்ள சூழலில் இருந்தாலும் தந்தையின் வளமான உணவினைக் கருதாதவளாக இருக்கிறாள். தற்போது ஒரு பொழுது இன்றி ஒரு பொழுதில் உண்ணும் மன வலிமையுடன் இருக்கின்றாள். இது வியப்பல்லவா?
பொற்கலத்தில் ஏந்திய பாலையே உண்ணாத தலைவி தற்போது ஒரு பொழுது உண்டு மறுபொழுது உண்ணாத நிலையில் இருக்கிறாள். இது கேட்டு நற்றாய் வருந்தினாலும் இவளுக்கு இப்பரிவு எங்ஙனம் வந்தது என வியக்கவும் செய்கிறாள். விளையாட்டு பெண்ணாக இருந்த மகள் தன்னை ஒறுத்துக் கொள்ளவும் துன்பம் பொறுத்து கொள்ளவும் எங்கே கற்றுக் கொண்டாள் எனத் தாய் வியக்கின்றாள்.

3
பாடியவர் : ஒவையார்
திணை : குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த இடமும் இதன் முதற் பொருளாகும். இத்திணைக்குரிய தெய்வம் முருகன். இதன் உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.
துறை : பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம் புக்கது.
தலைவன் தான் வினைவயிற் பிரிந்து செல்லுதலை தோழியிடம் உணர;த்துகின்றான். அது கேட்ட தோழி தலைவியின் முகம் நோக்கி, அவனது பிரிவுக்கு உடன்படுதலே மனைவியின் கடன் என்று உணர;த்தி அவளை இசைவிப்பது இத்துறையாகும்.
பாடல் விளக்கம் :
தோழி உன்னைக் காதலர் பிரிந்து ஒரு நாள் வாழ்ந்தாலும் நீ உயிர் வாழமாட்டாய். பெரிதும் நகைப்பிற்குரிய செயலை நீயே கேட்டு உணர்வாயாக. பொலிவு பெற்ற கூந்தலை உடையவளே, வினை மேற்கொள்ளுதற் பொருட்டு நம் காதலர் நம்மை விட்டு நீங்கிச் செல்ல இருக்கின்றான், என நம் அருகிலுள்ள ஏவலர் கூறுகின்றார். மேலும், அவர்கள் படம் எடுத்து ஆடும் பாம்பின் தலை நடுங்கும்படி செய்யும் மழையில் இடியான பேரொலியை நள்ளிரவில் தனியாய் இருந்து கேட்டுக் கொண்டு அவர் வினை முடித்து திரும்பி வரும்வரை வாழ்ந்திருத்தல் வேண்டும் என உரைப்பர். இது நகைப்பிற்குரியதல்லவா? எனக் கூறினாள்

கருத்துகள்