கிறிஸ்துவ இலக்கியம்

தமிழகம் சங்க காலத்திற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே யவனர் என்னும் ஐரோப்பபிபய நாட்டவருடன் வாணிக உறவு கொண்டு விளங்கியதைச் சங்க இலக்கிகயங்கள் கூறுகின்றன. யவனரைத் தொடர்ந்து இஸ்லாமியர் அரபு நாடுகளிளலிருந்து வாணபம் மசெய்தனர். பிறகு போர்ச்சுகல், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ் பிரான்னசு போன்ற பிற ஐரோப்பியய நாபட்டவரும் தமிழகத்திற்கு வந்தனர். வணகத் தொடர்போடு நில்லாமல் சமயயத்தையும் பரப்ப முற்பட்டனர். சமய பிரசாரத்திற்காகக் கிறிஸ்துவ பபாதிரிமமார்களையும்ம உடன் னஅழைத்து வந்தனர். பதிரிமார்கள் கிறிஸ்துவத்தைப் பரப்பும் தொண்டினைச் செய்தனர்.
சங்க காலத்தில் சிறந்திருந்த சைவ வைணவ சமயங்கள் சங்கம் மரவிய காலத்தில் களப்பிரர் வருகையால் சிறப்புக் குன்றிப் போக சமண பௌத்த சமயங்கள் செல்வாக்குப் பெற்றன. மீண்டும் பக்தி இயக்கத்தால் பல்லவர் காலேம்ம முதல் நாயக்கர் காலம் வரை சைவ வைணவ சமயங்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது. இஸ்லாமியர் ஆட்சியால் இஸ்லாமியம் பரவியது. அடுத்து ஐரோப்பியர் ஆட்சியால் அவர்களின் கிறிஸ்துவம் பரவியது. மதம் மற்றும் ஆட்சி காரணத்தால் நம் மொழியைக் கற்கத் தொடங்கினர். தமிழின் இனிமையில் தம்மை மறந்து தமிழுக்குத் தொண்டாற்றினர். தம்மை அறியாமல் தமிழுக்குத் தொண்டாற்றினர். ஆனனால் மதமாற்றம் செய்யப் பெற்ற கிறிஸ்தவர்கள் அறிந்தே தொண்டு செய்தனர். இவர்களுள் ஜி.யு.போப், ராபர்ட்-டி-நொபிலி, வீரமாமுனிவர், சீகன் பால்கு ஐயர், எல்லீஸ் துரை, கால்டுவெல் போன்ற மேல்நாட்டு கிறிஸ்துவர்களும் வேதநாயகம் பிள்ளை, வேதநாயக சாஸ்திரி, சாமுவேல்பிள்ளை, கிருட்டிணப்பிள்ளை போன்ற தமிழ்க் கிறிஸ்துவர்களும் குறிப்பிடத் தகுந்தவர்கள்.
 டாக்டர் ஜி.யு.போப்
தமிழை முறையாகக் கற்ற போப் அவர்கள், 60 ஆண்டுகட்கும் மேலாகத் தமிழ்த்தொண்டு புரிந்தார். தனது கல்லறைமேல் நான் ஒரு தமிழ் மாணவன் என்று பொறிக்கப்பட வேண்டும் என விழைந்தவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து தமிழை உலகறியச் செய்தவர். மேல்நாட்டு அறிவுத் துறைகளான உளநூல், தத்துவ நூல், கணிதம், அளவை நூல் (Logic) என்பவற்றை முதன் முதலில் தமிழில் கற்பித்தவர் இவரே. திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூல்களின் சில பாடல்களையும்சிவஞான போதத்தையும் மொழி பெயர்த்தார். பல ஏடுகளில் தமிழ் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். தோடர் மொழி, துளுமொழி கற்று அவற்றின் இலக்கணத்தை வெளியிட்டார். தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என 3 பாகமாக எழுதினார். தமிழ்ப் புலவர்களையும், தமிழ்த் துறவிகளையும் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.
 ராபர்ட் -டி-நொபிலி
இத்தாலி நாட்டில் பிறந்து, 1606இல் தமிழ்நாடு வந்து தமிழும் வடமொழியும் கற்றார் நொபிலி. காவியும் பூணூலும் அணிந்து மரக்கறி உணவுண்டு, தத்துவ போதகர் என்று தம் பெயரை மாற்றி, தம்மை இத்தாலியப் பிராமணர் என்று கூறிக் கொண்டார். நூற்றுக்கணக்கான உயர் சாதி இந்துக்களைக் கிறித்தவராக்கினார். திருமலை நாயக்கரின் நண்பரான பின், சில ஆண்டுகள் கழித்து இலங்கையும் சென்று வந்தார். 1647இல் மயிலாப்பூரில் மறைந்தார்.
‘முதல் உரைநடை நூலை’த் தமிழில் எழுதிய பெருமை இவரையே சாரும். சமயச் சார்புடைய, வடசொல் கலந்த மேனாட்டு மொழி கலந்த ஒரு கொச்சை மொழியில் பல நூல்கள் எழுதினார். அச்சேறாத காரணத்தால் அவை அழிந்தன. பிற மதங்களைக் கண்டிப்பது இவர் காலத்தில் நிலவியதை அறிகிறோம். ஞானோபதேச காண்டம், மந்திர மாலை, ஆத்தும நிர்ணயம், தூஷணதிக்காரம், சத்திய வேத இலட்சணம், சகுண நிவாரணம், பரமசூட்சும அபிப்ராயம், கடவுள் நிர்ணயம், புனர்ஜென்ம ஆட்சேபம், நித்ய ஜீவன சல்லாபம், தத்துவக் கண்ணாடி, ஏசுநாதர் சரித்திரம், தவசுச் சதகம், ஞானதீபிகை, நீதிச்சொல், அநித்திய நித்திய வித்யாசம், பிரபஞ்ச விரோத வித்யாசம் முதலிய 17 நூல்களை இயற்றியுள்ளார்.
வீரமாமுனிவர்
இவரின் இயற்பெயர் - கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் க்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
சீகன் பால்கு
1682-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்தவர் பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு. இவர் டென்மார்க் நாட்டில் உள்ள திருச்சபை சார்பில், கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வந்தார் பொதுமக்கள் உதவியுடன் தமிழ் மொழியை 11 நாளில் கற்றுக் கொண்டார். பின்பு அவர் 17 ஆயிரம் சொற்களை கொண்ட தமிழ் அகராதியை விரைவில் உருவாக்கினார். பிறகு பைபிளின் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழி பெயர்த்தார்.

1710-ம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து தமிழ் அச்சு இயந்திரம் கொண்டு வர ஏற்பாடு செய்தார். பொறையாறு அருகே ஓர் இடத்தில் காகித பட்டறை நிறுவி, மரக்கூழ் மூலம் காகிதம் செய்யும் தொழிற்சாலையை தொடங்கினார். இன்றும் இந்தப் பகுதி "கடுதாசிப் பட்டறை" என்றே அழைக்கப்படுகிறது.

1715-ம் ஆண்டு தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை வெளியிட்டார். சீகன் பால்கு முயற்சியால் இந்தியாவில் முதன் முதலில் தமிழ் அச்சுகள் உருவானது, சிறப்பு அம்சமாகும்.
எல்லீஸ் துரை
தமிழ், வடமொழி இரண்டையும் முறையாகக் கற்ற இவர் எல்லீசர் என்றும் அழைக்கப் பெறுகிறார். சென்னையில் வருவாய் வாரியச் செயலராக இருந்து, காணியாட்சி முறையும் வேளாண் சீர்திருத்தமும் கண்டவர். முத்துச்சாமி பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவரின் நூல்களை எல்லாம் தேடச் செய்தார். வீரமாமுனிவர் வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். திருக்குறளின் முதல் 13 அதிகாரங்கட்கு முதன்முதலில் உரையெழுதினார். கால்டுவெல்லுக்கு முன்பே, திராவிட மொழிகளைக் கற்றுத் திராவிட மொழிகள் வடமொழியினின்றும் வேறானவை; கிளை மொழிகள் அல்ல; தனித்து இயங்குவன என்ற உண்மைக் கருத்துகளை வெளியிட்டார்.
தமிழ்க் கிறித்தவர்கள்
மேலை நாட்டுக் கிறித்தவர்கள் குறிப்பாக ஐரோப்பியர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டைப் போல், தமிழ்நாட்டுக் கிறித்தவர்களும் தம் படைப்பால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர்.
• வேதநாயகம் பிள்ளை
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்று மாயூரத்தில் முனிசீப்பாகப் பணியாற்றினார். நீதிச் சட்டங்களை முதன்முதலில் தமிழில் எழுதியவர் இவரே. பிரதாப முதலியார் சரித்திரம் என்ற முதல் தமிழ் நாவலையும் எழுதியவர் இவரே. பின் சுகுண சுந்தரி சரித்திரம் என்ற நாவலும் எழுதினார். கடிதம் எழுவதுபோல் சில தனிப்பாடல்கள் எழுதியுள்ளார். நலுங்குப்பாடல் வகையிலும் அங்கத இலக்கிய வகையிலும் பாடல் புனைந்துள்ளார். சாதிவேறுபாட்டை வெறுத்த இவர், பெண்கள் முன்னேற்றம், பெண்கல்வி என்பதிலும் செய்யுள், உரைநடை என்பதிலும் மகாகவி பாரதிக்கு முன்னோடியாகத் திகழ்கிறார். தாயுமானவரைப் போன்றே சமரசத்தை விரும்பி, சர்வசமயச் சமரசக் கீர்த்தனை பாடினார். நீதி நூல், பெண்மதி மாலை, தேவமாதா அந்தாதி, திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, பெரியநாயகி அம்மாள் பதிகம், சத்திய வேதக் கீர்த்தனை என்ற நூல்களைப் பாடினார். அக்காலத்தில், வழக்குகளில் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நேர்மையான எண்ணம் கொண்டவர். இலஞ்சம் வாங்கிப் பிழைப்பவர்களை, ‘ஏதுக்கோ வாங்குகிறீர் இலஞ்சம் ....’ என்ற பாட்டில் கடுமையாகச் சாடுகிறார். இவர் தம் பாடல்களில் வடமொழிச் சொற்கள் பல சர்வ சாதாரணமாய்க் கலந்து விளங்குகின்றன.
போதக யூரோப்பு மாதர்களைக்கண்டு 
பொங்கிப் பொறாமை கொண்டோமே என்றும்
 
பேதம் இல்லா இந்தியா தனில்நாங்கள்
 
பிறந்தென்ன லாபம் கண்டோமா
 
நாதக் கல்விக்கு நகை எந்தமூலையே
 
நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே
 
வேதநாயகன்செய் பெண்மதி மாலையே
 
வேண்டினோம் தாரும் விடோம் உங்கள் காலையே
(சர்வசமயச் சமரசக் கீர்த்தனைகள் - வேதநாயகம் பிள்ளை -கேளும் பூமான்களே என்ற 5 - ஆம் பாடல்)
என்று கல்வி வேண்டி ஒரு பெண் பாடுவதாக வேதநாயகம் பிள்ளை பாடியுள்ளார்.
• H.A கிருஷ்ணப் பிள்ளை
வைணவ வேளாளர் மரபில் தோன்றிக் கிறித்துவராக மாறி, கிறித்தவக் கம்பன் என்று புகழப் பெறுபவர். ஜான்பன்யன் என்பவர் எழுதிய Pilgrims Progress என்ற நூலை இரட்சண்ய யாத்திரீகம் எனத் தமிழ்ப்படுத்தினார். இவர் பாடல்கள் ஆழ்வார், நாயன்மார் பாடல்கள் போல் உருக்கமாக அமைந்துள்ளன. கிறித்தவர்களின் தேவாரம்என்றழைக்கப் பெறும் இரட்சண்ய மனோகரம் என்ற நூலையும், இரட்சண்ய சமய நிர்ணயம், இரட்சண்யக் குறள், போற்றித் திருஅகவல் என்ற நூலையும் பாடினார். இலக்கணச் சூடாமணி, கிறித்தவரான வரலாறு என்ற உரைநடை நூல்களையும் காவிய தர்ம சங்கிரகம் என்ற தொகுப்பு நூலையும் எழுதினார். கால்டுவெல்லின்பரதகண்ட புராதனம் என்ற நூலையும் வேதமாணிக்க நாடாரின் வேதப் பொருள் அம்மானை என்ற நூலையும் பதிப்பித்தார். பெர்சிவல் பாதிரியாருக்குத் தமிழ் கற்பித்தார்; தினவர்த்த மானியின் துணை ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
• வேதநாயகம் சாத்திரியார்
சரபோசி மன்னரின் ஆஸ்தான வித்துவானாக, அரசவைப் புலவராகத் திகழ்ந்த சாத்திரியார் கிறித்தவப் பாக்கள் பல்லாயிரம் இயற்றி, ஆஸ்தான வித்துவான் பட்டம் பெற்றவர். கிறித்தவப் பாடல்களைத் தமிழிசையுடன் இயைத்து இயற்றி முதன் முதலில் வழிகோலியவர் இவரே! வின்சுலோவுடன் இணைந்து குருட்டுவழி என்ற நூலையும், அக்காலத்திலே 100 வராகன் பரிசு பெற்ற நோவாவின் கப்பல் என்ற நூலையும் பாடினார். சரபோசி மன்னர் வேண்டியும் ‘கிறித்துவைத் தவிரப் பாடேன்!’ என்று கூறியவர். பெத்லகேம் குறவஞ்சி, சென்னைப் பட்டணப் பிரவேசம், ஞான ஏற்றப்பாட்டு, ஞானத்தச்சன் நாடகம், ஞானக் கும்மி, ஆதியானந்தம், பராபரன்மாலை, ஞானஉலா, ஞான அந்தாதி முதலான 52 நூல்களைப் பாடியுள்ளார். தமிழகப் பக்தி நெறிப்படி கர்த்தரை வழிபட வழிகாட்டியவர்.

கருத்துகள்